
பிசிசிஐ சாா்பில் 5 மகளிா் அணிகள் பங்கேற்கும் டபிள்யுபிஎல் (மகளிர் ப்ரீமியா் லீக்) டி20 லீக் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுவதால் இத்தொடரின் மீது மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தொடரின் முதலாவது போட்டி மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய மார்ச் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யுபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டபிள்யுபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன. மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் விளையாட்டுத் திடலில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்திய நேரம் இரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டம் தொடங்குவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது முதல் ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.