
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சாம்பியன் அணிகளை தோற்கடித்த இந்தியா நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்காவையும் 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சொல்லப்போனால் நெதர்லாந்தை தவிர்த்து என்று அனைத்து போட்டிகளிலும் அசால்டாக 300 – 400 ரன்கள் குவித்து எதிரணிகளை பந்தாடி அரையிறுதிக்கும் தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்கா இப்போட்டியில் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 101, ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதை துரத்திய துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 83 ரன்ககளுக்கு சுருண்டு சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ ஜான்சென் 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்கள் எடுத்தார்.