ஆஷஸ் 2023: ஆண்டர்சன்னுக்கு பதிலாக வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஷஸ் தொடரில் அதிகளவு ரன்களை வாரி வழங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு பதிலாக மார்க் வுட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதுவரை ஆஸ்திரேலியா அணி 34 தொடரினை வென்று முன்னிலையில் உள்ளது. 32 தொடரினை வென்ற இங்கிலாந்து சமீபகாலமாக ஆஸ்திரேலியாவுடன் தொடர் தோல்விகளை தழுவி வருகின்றன.
தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. 40 வயதாகும் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்ந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சரியாக பந்து வீசவில்லை. விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் மைதானத்தை குறைக்கூறி வருகிறார். ஆனால், டெஸ்டில் 688 விக்கெட்டுகளை எடுத்து உள்ளதும் குறிபிடத்தக்கது. 2 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து 75.33 சராசரி ரன்களை வழங்கியுள்ளார்.
Trending
இந்நிலையில் அதிகளவு ரன்களை வாரி வழங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு பதிலாக மார்க் வுட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “இங்கிலாந்திற்கு இந்தத் தொடரில் மிகவும் மோசமான பந்து வீச்சாளராக ஆண்டர்சன் மாறியுள்ளார். புதிய பந்தில் விக்கெட் எடுக்கும் ஆண்டர்சன், பந்தினை நன்றாக ஸ்விங் செய்வார், ரன்களும் வழங்கமாட்டார்.
ஆனால் இந்தத் தொடரில் அப்படி பார்க்கமுடியவில்லை. ஆண்டர்சனுக்கு பதிலாக மார்க் வுட்டை யோசித்து பார்க்கலாம். மார்க் வுட் உடல் நிலை நன்றாக இருந்தால் நிச்சயமாக அவரை விளையாட வைக்கலாம். இங்கிலாந்திற்கு அடுத்த 3 போட்டிகளை வெல்ல வேண்டிய அவசியம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now