Advertisement
Advertisement
Advertisement

ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கடினமானதாக இருக்கும் - ரிக்கி பாண்டிங்!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி என இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து கவனித்து கொள்ள வேண்டியிருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளர்.

Advertisement
ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கடினமானதாக இருக்கும் - ரிக்கி பாண்டிங்!
ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கடினமானதாக இருக்கும் - ரிக்கி பாண்டிங்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 10, 2024 • 10:32 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 10, 2024 • 10:32 PM

அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளது.இதனால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியானது. 

Trending

இதனால் அப்போட்டிக்கான இந்திய அணியை அணியின் துணைக்கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், “ரோஹித் சர்மா அணியில் இல்லாத பட்சத்தில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி என இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து கவனித்து கொள்ள வேண்டியிருக்கும். அதனால் நிச்சயம் அவருக்கு கேப்டன் பொறுப்பு கடினமானதாக இருக்கும். மேலும் அவர் எத்தனை ஓவர்கள் பந்துவீசப் போகிறார்? அவர் அதிக ஓவர்கள் வீசுவாரா? போன்றவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement