Advertisement

ஷுப்மன் கில் கேப்டன்சியை விமர்சித்த ரிக்கி பாண்டிங்!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் பந்துவீச்சை மாற்றுவதில் நிறைய தவறுகளை செய்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Advertisement
ஷுப்மன் கில் கேப்டன்சியை விமர்சித்த ரிக்கி பாண்டிங்!
ஷுப்மன் கில் கேப்டன்சியை விமர்சித்த ரிக்கி பாண்டிங்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 25, 2025 • 12:14 PM

Manchester Test: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மான் கில்லின் கேப்டன்சியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 25, 2025 • 12:14 PM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஒல்லி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டை கைப்பறியுள்ளனர். இதையடுத்து 133 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சை மாற்றுவதில் நிறைய தவறுகளை செய்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியில் இந்திய அணி தந்திரோபாயமாக பந்து வீசியதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் என்னைக் கேட்டால் இப்போட்டியில் அறிமுக வீரர் அன்ஷுல் காம்போஜ் புதிய பந்தை எடுத்திருக்கக்கூடாது.

தொடக்கத்திலிருந்தே எனக்கு அது பிடிக்கவில்லை. டக்கெட் அடித்த முதல் ஆறு பவுண்டரிகளில் ஐந்து பவுண்டரிகள் ஸ்கொயர் லெக்கிற்குப் பின்னால் இருந்தன. எனவே பந்துவீச்சாளர்களின் லைன் மற்றும் லெந்த் தவறாக இருந்தன. மேலும் ஜஸ்பிரித் பும்ரா தவறான முனையில் பந்துவீசினார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் ஸ்டெதம் முனையிலிருந்து பந்துவீசினால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் ஷுப்மன் கில் அதில் தவறு செய்துள்ளார்” என்று கூறியுள்ளார். 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Also Read: LIVE Cricket Score

இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement