
ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிரோபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தொல்லையாக அஸ்வின் இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் அதிக இடது கை பேட்டர்கள் இருக்கின்றனர்.
இதானாலேயே அஸ்வினை எதிர்கொள்ளும் வலைபயிற்சியை 5 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டனர் ஆஸ்திரேலியாவின் பேட்டர்கள். மேலும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தனியாக ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது 21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரான இவர், ரஞ்சிக்கோப்பையில் பரோடா அணிக்காக அறிமுகமான வீரர். அப்படியே ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரியான பந்துவீச்சு ஆக்சனை கொண்டுள்ளார். இவரது பந்துவீச்சை இன்ஸ்டாக்ராமில் கண்ட ஆஸ்திரேலிய அணி, வலைபயிற்சியில் பந்துவீசுமாறு மகேஷ் பிதியா உதவியை நாடியது.