
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் இரட்டை சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தானை போராடி இந்தியா தோற்கடித்தது மறக்க முடியாததாக அமைந்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்களை இழந்து 22/4 என தடுமாறியது.
அப்போது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி 190 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்தியா 212 ரன்கள் குவிக்க உதவினார்கள். குறிப்பாக ரிங்கு சிங் மிகவும் இளம் வயதிலேயே அழுத்தமான சூழ்நிலையில் அபாரமாக விளையாடி கடைசி ஓவரில் 3 சிக்சர்கள் அடித்தது உட்பட 69* ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.
கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து கொல்கத்தாவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அப்போதிலிருந்து இதுவரை பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் வந்து வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்து கொடுக்கும் ரிங்கு சிங் ஜாம்பவான் தோனி போல அடுத்த ஃபினிஷராக உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.