Advertisement
Advertisement
Advertisement

இளம் விக்கெட் கீப்பர்களை அடையாளம் காண்போம் - சவுரவ் கங்குலி!

சமீபத்திய பேட்டியில் தோனி மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் ஒப்பிட்டு டெல்லி அணிக்கு அப்படி ஒரு கீப்பர் கிடைப்பார் என அந்த அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 04, 2023 • 14:22 PM
"Rishabh Became Better Since MS Dhoni Stopped Playing": Sourav Ganguly! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடர் துவங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு முதன்மை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக இடம் பெறவில்லை என்பதால், டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் டெல்லி அணி 50 வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. தனது இரண்டாவது லீக் போட்டியை டெல்லி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

ரிஷப் பந்த் அணியில் இல்லாதது, பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் பெரிய வித்தியாசத்தை காட்டுகிறது என பலரும் விமர்சித்தனர். ஏனெனில் சர்ப்ராஸ் கான் முதல் போட்டியில் கீப்பிங் செய்த விதம் சர்வதேச தரத்தில் இல்லை. எளிதாக பிடிக்க வேண்டிய பந்துகளை பலமுறை தவறவிட்டார் என்பதால் இத்தகைய விமர்சனம் வந்திருக்கிறது. 

Trending


இந்நிலையில் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய சவுரவ் கங்குலி, “சர்ப்ராஸ் கான் கீப்பிங்கை விட பேட்டிங்கில் கவனம் செலுத்துங்கள். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக இந்த சீசன் கீப்பிங் செய்தார். அதைவிட இதில் இன்னும் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். விரைவில் கற்றுக்கொண்டு கீப்பிங் கிலும் தனது முக்கிய பங்களிப்பை கொடுப்பார் என்று அணி நிர்வாகம் நம்புகிறோம். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் எவரையும் முன் முடிவு செய்யாதீர்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி விரைவில் அணியை விட்டு செல்கிறார் என்பதால் தான் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உள்ளே வந்தார். அவர் வந்த பிறகு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை அனைவரும் பார்த்தோம். அதேபோல் ரிஷப் பந்த் இல்லாத இந்த இக்கட்டான சூழலில் இளம் விக்கெட் கீப்பர்களை அடையாளம் காண்போம் அவர்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம். அதுவரை ரசிகர்கள் சற்று பொறுமை காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement