ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - பார்த்தீவ் படேல்!
இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்கலாம் என முன்னாள் இந்திய வீரரான பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று (9ஆம் தேதி) நடைபெற உள்ளது.
Trending
முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த் போன்ற இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் இரண்டாவது போட்டிக்கான அணியில் விளையாட உள்ளதால், இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சீனியர் வீரர்கள் திரும்புவதால், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இரண்டாவது போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதால், யார் யாருக்கு அணியில் இடம் கிடைக்கும்..? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதனால் முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்துவதோடு, யார் யாருக்கு இடம் கொடுக்கலாம், யாரை எந்த இடத்தில் களமிறக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான பார்த்தீவ் பட்டேல், இஷான் கிஷனிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டை துவக்க வீரராக களமிறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பார்த்தீவ் பட்டேல் பேசுகையில், “ரிஷப் பந்த் மற்றும் விராட் கோலிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுப்பது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இஷான் கிஷனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை துவக்க வீரராக களமிறக்கலாம்.
அக்ஷர் பட்டேலிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவிற்கு இடம் கொடுக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன். அர்ஸ்தீப் சிங்கிற்கு பதிலாக பும்ராஹ் விளையாடுவார். விராட் கோலிக்கும் இடம் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் விராட் கோலிக்கு பதிலாக யாரை அணியில் இருந்து நீக்குவார்கள் என்பது தெரியவில்லை. தீபக் ஹூடாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் விராட் கோலி களமிறக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now