
Rishabh Pant Record: 148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில், வெளிநாட்டு மண்ணில் 1000 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் ரன்களை அடித்த உலகின் முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலியில், முதல் நாளில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஒரு தனித்துவமான உலக சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் அவர் 37 ரன்களைச் சேர்த்த நிலையில் காயத்தை சந்தித்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில் இப்போட்டியில் அவர் 37 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இங்கிலாந்தில் தனது 1000 டெஸ்ட் ரன்களையும் நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் 148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில், வெளிநாட்டு மண்ணில் 1000 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் ரன்களை அடித்த உலகின் முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் 24 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.