
இந்திய அணி ஆஸ்திரேலியக்கு எதிராக அவர்கள் நாட்டில் கபா மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பி விட, அஜிங்கியா ரஹானே தலைமையில் இளம் இந்திய வீரர்கள், மிகக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்ட் தொடரை வென்று வந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய எல்லா வீரர்களுமே தொடரின் கடைசியில் ஹீரோக்களாக வெளியே வந்தார்கள். அதில் மிக முக்கியமானவர் காபா டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்த ரிஷப் பந்த்.
இந்நிலையில், வெற்றி பெற்ற அந்த நேரத்தில் அணி வீரர்கள் எப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்? தான் எப்படி இருந்தேன்? ரோஹித் சர்மா அதை பார்த்து தன்னிடம் என்ன சொன்னார்? என்பது குறித்து எல்லாம் பின்னோக்கி போய் நிறைய விஷயங்களை ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார்.