
Anderson–Tendulkar Trophy: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இதனையாடுத்து மான்செஸ்டரில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்ததை அடுத்து, இங்கிலாந்து அணி முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும்.