Advertisement

மான்செஸ்டர் டெஸ்ட்: ரோஹித், சேவாக் சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

Advertisement
மான்செஸ்டர் டெஸ்ட்: ரோஹித், சேவாக் சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
மான்செஸ்டர் டெஸ்ட்: ரோஹித், சேவாக் சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 24, 2025 • 09:34 PM

Rishabh Pant Records: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் முன்னாள் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 24, 2025 • 09:34 PM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். 

இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். 

WTC-ல் அதிக ரன்கள்

இப்போட்டிய்ல் ரிஷப் பந்த் 54 ரன்களைச் சேர்த்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா 40 போட்டிகளில் 2716 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ரிஷப் பந்த் 38 போட்டிகளில் 2731 ரன்களைச் சேர்த்து இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள்

  • ரிஷப் பந்த் - 2731 ரன்கள் (38 போட்டிகள்)
  • ரோஹித் சர்மா - 2716 ரன்கள் (40 போட்டிகள்)
  • விராட் கோலி - 2617 ரன்கள் (46 போட்டிகள்)
  • சுப்மான் கில் - 2512 ரன்கள் (36 போட்டிகள்)
  • ரவீந்திர ஜடேஜா - 2232 ரன்கள் (43 போட்டிகள்)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்

இதுதவிர்த்து ரிஷப் பந்த் தனது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் சாதனையை சமன்செய்துள்ளர். இதற்கு முன் வீரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் 90 சிக்ஸர்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், ரிஷப் பந்த் தனது 47ஆவது டெஸ்டில் 90 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தை பகிர்ந்துள்ளார். 

இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் 

  • ரிஷப் பந்த் - 90 சிக்ஸர்கள் (47 டெஸ்ட்)
  • வீரேந்திர சேவாக் - 90 சிக்ஸர்கள் (103 டெஸ்ட்)
  • ரோஹித் சர்மா - 88 சிக்ஸர்கள் (67 டெஸ்ட்)
  • மகேந்திர சிங் தோனி - 78 சிக்ஸர்கள் (90 டெஸ்ட்)
  • ரவீந்திர ஜடேஜா - 74 சிக்ஸர்கள் (84 டெஸ்ட்)

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement