
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானின் முதல் பாதி முடிந்த நிலையில், இரண்டாம் பாதி தொடங்கிய போது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு டெல்லி அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் ? என்று கேள்வி சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் எழுந்தன. ஏனெனில் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது அந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக இளம் வீரரான ரிஷப் பந்த் டெல்லி அணியின் கேப்டனாக வழிநடத்தினார். அவரது தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 6 வெற்றிகளைப் பெற்று இந்த தொடரில் முதலிடத்தில் நீடிக்கிறது.