Rishabh Pant Injury: மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ரிஷப் பந்த் காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்றும் இதனால் துருவ் ஜூரெல் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இதனால் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பின் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.