லார்ட்ஸ் டெஸ்ட்: காயத்தை சந்தித்த ரிஷப் பந்த்; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியாறியுள்ளது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 23 ரன்களைச் சேர்த்த நிலையிலும், மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் செஷனிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்துள்ள ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் துணைக்கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் விரல் பகுதியில் காயத்தை சந்தித்துள்ளார்.
அதன்படி இன்னிங்ஸின் 34ஆவது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசிய நிலையில் ஓவரின் முதல் பந்தை இன்ஸ்விங்கராக வீச அதனை எதிர்கொண்ட ஒல்லி போப் டௌன் லெக் திசையை நோக்கி அடிக்க முயன்றார். ஆனால் அதனை ஒல்லி போப் தவறவிட, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அந்த பந்தை தாவி பிடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்து அவரின் விரல் நுனியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. அதன்பின் அணி மருத்துவர்கள் ரிஷப் பந்திற்கு முதலுதவி அளித்தனர்.
Rishabh Pant walks off the field after a nasty blow to his fingers
— CRICKETNMORE (@cricketnmore) July 10, 2025
Dhruv Jurel takes over the gloves as the substitute keeper
Live #ENGvsIND Scores @ https://t.co/Fg4VybTV4u pic.twitter.com/E2je1PyYZt
இருப்பினும் அவர் மீண்டும் கையுறையை அணி முயற்சிக்கும் போது வலி தாங்கமுடியாமல் தவித்தார். இதனையடுத்து அவர் உடனடியாக பெவிலியனுக்கு திரும்பினார். இதன் காரணமாக அணியின் தற்காலிக விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் செயல்பட்டு வருகிறார். மேலும் ரிஷப் பந்த் காயம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இதனால் அவாரது காயம் இந்திய அணிகு பெரும் பின்னடைவாக ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர்.
Also Read: LIVE Cricket Score
இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now