ஐபிஎல் 2023: போட்டியைக் காண வரும் ரிஷப் பந்த்; உறுதி செய்த டிடிசிஏ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் விளையாடும் இன்றைய போட்டிக்கு ரிஷப் பண்ட் வருவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் தெரிவித்துள்ளார்
ஐபிஎல் 2023 தொடர் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகளுமே ஒவ்வொரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் ஒரு சில அணிகள் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளன. அதில், டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஒன்று. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று டெல்லி அணி ஹோம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. ஏற்கனவே நடப்பு சாம்பியன் வேறு, முதல் போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக குஜராத டைட்டன்ஸ் அணி விளங்கிறது.
Trending
ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கலீல் அகமது, முகேஷ் குமார், சேத்தன் சகாரியா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை. ரன்களை வாரி வழங்கினர். ஆனால், டெல்லி அணியில் இடம் பெற்ற ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகிய் வேகப்பந்து வீச்சாளர்கள் இன்று நடக்கும் போட்டியின் மூலமாக அணியில் இடம் பெறுவார்கள்.
இந்த நிலையில், தான் கார் விபத்து காயம் காரணமாக ஐபிஎல் தொடைரிலிருந்து விலகிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விலகினார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், முதல் போட்டியின் போது அவரது ஜெர்சியை வீரர்கள் அமர்ந்திருக்கும் டக் அவுட்டில் வைத்திருந்தனர். அந்தப் போட்டிக்கு அவர் வரவில்லை. இந்த நிலையில் டெல்லியில் இன்று நடக்கும் போட்டியில் ரிஷப் பந்த் இடம் பெறுவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ராஜன் மஞ்சந்தா தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now