
அண்மை காலமாக விராட் கோலி வெறும் நட்சத்திர பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கு வழிகாட்டியயும் காண முடிந்தது.
அந்த வகையில் ஐபிஎல் தொடரின் ஏராளமான இளம் வீரர்கள் விராட் கோலியை சுற்றி நின்று பேசுவார்கள். அனைவருடனும் நிதானமாக பேசும் விராட் கோலி, அவர்களுக்கு பேட்டிங் குறித்து நுணுக்கங்களை கூறுவதாக சொல்லப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் ஏபி டிவில்லியர்ஸ் பேசுகையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது கிட்டத்தட்ட 8 வீரர்களை விராட் கோலி சுற்றி நின்றார்கள்.
அவர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரு 30 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி குறித்த ஒரு வகுப்பையே விராட் கோலி எடுத்தார் என்று கூறி இருந்தார். அனைத்து நாடுகளிலும் மரபு ரீதியான டெக்னிக்கை வைத்து விளாசிய விராட் கோலியின் வார்த்தைகளால் தான் இளம் வீரர் ரியான் பராக்கும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளார்.