Advertisement
Advertisement
Advertisement

விபத்திற்கு பின் ரிஷப் பந்த் பதிவிட்ட முதல் பதிவு!

எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இந்திய வீரர் ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 16, 2023 • 21:28 PM
Road To Recovery Has Begun, I Am Ready For The Challenges Ahead, Says Pant After Surgery
Road To Recovery Has Begun, I Am Ready For The Challenges Ahead, Says Pant After Surgery (Image Source: Google)
Advertisement

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து காரில் தனி நபராக, ரிஷப் பந்த் உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு வந்துள்ளார். அதிகாலையில் அவர் வந்த கார் சாலைதடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர், அவ்வழியாகச் சென்றவர்களின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப பந்த்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, விமானம் மூலமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.  தற்போதைய சூழலில் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trending


இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்தின் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், 3 ஃபார்மேட்டுகளிலும் ரிஷப் பந்த் அற்புதமான ஆட்டத்தை பெல முறை வெளிப்படுத்தியுள்ளார்.

விபத்தின்போது மூட்டில் படுகாயம் அடைந்த ரிஷப பந்த்திற்கு 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றில் 2 அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அடுத்ததாக 6 வாரங்கள் கழித்து மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில் விபத்திற்கு பின்னர் முதன்முறையாக ரிஷப் பந்த் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. நான் குணம் அடைந்து வருகிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிசிசிஐ, ஜெய் ஷா, அரசு அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னுடைய ரசிகர்கள், அணி வீரர்கள், மருத்துவர்களுக்கும் நன்றி. உங்களுடைய அன்பான வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தின. விரைவில் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதை எதிர்பார்த்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement