Advertisement

ஐஎல்டி20 தொடரில் விளையாடத் தயாராகும் ராபின் உத்தப்பா!

சர்வதேச மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா.

Bharathi Kannan
By Bharathi Kannan December 19, 2022 • 21:57 PM
Robin Uthappa and Yusuf Pathan to play for Dubai Capitals in ILT20
Robin Uthappa and Yusuf Pathan to play for Dubai Capitals in ILT20 (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. கேரளாவைச் சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் உத்தப்பா விளையாடியுள்ளார். மேலும் 205 ஐபிஎல் ஆட்டங்களிலும் விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார். 

அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றதில் உத்தப்பாவின் பங்களிப்பும் உண்டு. பிளேஆஃப் ஆட்டத்தில் 44 பந்துகளில் 63 ரன்களும் இறுதிச்சுற்றில் 15 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தார். வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காகச் அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

Trending


இந்நிலையில் ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் விளையாடவுள்ளார் உத்தப்பா. இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ள ஆறு அணிகளில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி, 37 வயது ராபின் உத்தப்பாவைத் தேர்வு செய்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக உள்ளதாக உத்தப்பா தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement