
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்திய அணியின் இந்த படுதோல்விக்கு காரணமாக அணியின் பேட்டர்கள் சரிவர செயல்படாததே என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீருன் தனது முதல் ஒருநாள் தொடரிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், கௌதம் கம்பீருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கௌதம் கம்பீர் முக்கிய வாய்ப்புகளைத் தேடி, அவற்றைக் கைப்பற்ற முயற்சிப்பார். ஒரு தலைவராக, மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்கும் அவரது திறமைக்கு நான் உறுதியளிக்கிறேன். அவர் அந்த வகையான தலைவர். அதுமட்டுமின்றி ஒரு சிறந்த கேப்டன் என்பதை விட, அவர் ஒரு சிறந்த தந்திரவாதி மற்றும் ஒரு சிறந்த மக்கள் தலைவர். அவர் வெற்றியை ஊக்குவிக்கும் குழுவிற்குள் ஒரு கலாச்சாரத்தை வளர்க்கிறார்.