Advertisement

கோலி, ரோஹித்தை மட்டுமே நம்பினால் ஒருபோதும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது - கபில் தேவ் காட்டம்!

இப்போதே 2011 ரிப்பீட் ஆகுமா என்றும், தோனிக்குப் பிறகு இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் 3ஆவது உலகக் கோப்பையை வென்று விடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு கபில் தேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 03, 2023 • 21:40 PM
'Rohit and Kohli alone won't win you the World Cup'- Kapil Dev
'Rohit and Kohli alone won't win you the World Cup'- Kapil Dev (Image Source: Google)
Advertisement

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். அதற்கான வேலைகளிலும் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், “உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமா? பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.

Trending


உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும்.

எப்போதும் ஒன்றிரெண்டு வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோஹித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன் வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement