ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் சாதனைக்காக விளையாடவில்லை - சுனில் கவாஸ்கர்!
முதல் அரை இறுதியில் டாஸ் வென்றால் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியாவும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல் அரை இறுதியில் டாஸ் வென்றால் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “அரையிறுதியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் நிச்சயம் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சு படை சிறப்பாக இருக்கிறது. அவர்களுக்கு முதலில் பந்து வீசுவதோ இல்லை, இரண்டாவது பந்து வீசுவதோ பெரிய காரியமே கிடையாது. இரண்டாவது பந்து வீசும் போது பனிப்பொழிவு கொஞ்சம் இருக்கும். ஆனால் முதலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அது சாதகமாக இருக்கும்.
இதன் மூலம் பந்து நன்றாக விக்கெட் கீப்பர் இடம் பறக்கும். மேலும் இந்தியா பந்துவீச்சில் எவ்வளவு இலக்காக இருந்தாலும் கூட தற்காத்துக் கொள்ளும் திறமை இருக்கிறது. மேலும் அரை இறுதி போன்ற ஆட்டத்தில் எவ்வளவு அதிகம் இலக்கு நிர்ணிக்கிறோமோ அது நியூசிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும். அதற்காக உங்களை நான் 400 ரன்களை அடிக்க சொல்லவில்லை. 260 அல்லது 270 ரன்கள் எடுத்தால் கூட நியூசிலாந்து அணிக்கு அது நெருக்கடியை தான் ஏற்படுத்தும்.
ரோஹித் சர்மா தன்னுடைய ஆட்ட ஸ்டைலை மாற்றிக் கொள்ளக் கூடாது. இந்த தொடர் முழுவதும் அவர் எப்படி விளையாடுகிறாரோ அதை தான் தொடர வேண்டும். ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் சாதனைக்காக விளையாடவில்லை.அவர் அனைத்து நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக விளையாடுகிறார். எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல் சில ஓவர்களில் பந்து புதிதாக இருக்கும் போது அதனை நன்றாக பயன்படுத்தி பார்க்கிறார். முதல் எட்டு பத்து ஓவரில் அதிரடியாக விளையாடி பந்து வீசும் அணியை நெருக்கடிக்கு ஆழ்த்துங்கள்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now