Advertisement

ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!

அஜிங்கியா ரஹானே தலைமையிலான 17 பேர் அடங்கிய மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

Advertisement
ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!
ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 20, 2025 • 09:11 PM

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் கட்டத்தை விட இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் இத்தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் விளையாடவுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 20, 2025 • 09:11 PM

இதற்கு காரணம் இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது. இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

Trending

அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. அதில் மிக முக்கியானது அனைத்து வீரர்களும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில தினங்களாக மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அவர் விளையாடுவார் என்பது உறுதியானது. 

 

இந்நிலையில் ஜம்மூ காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான 17 பேர் அடங்கிய மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரது பெயர்களும் இடம்பிடித்துள்ளது. இதனால் இப்போட்டியில் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை ரஞ்சி அணி: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆயுஷ் மத்ரே, ஸ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஹார்டிக் தோமோர், ஆகாஷ் ஆனந்த், தனுஷ் கோட்டியன், ஷம்ஸ் முலானி, ஹிமான்ஷு சிங், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோசா, ராய்ஸ்டன் டயஸ், கர்ஷ் கோத்தாரி

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement