கேப்டன் என்பதால் தான் ரோஹித் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கிறார் - இர்ஃபான் பதான் தாக்கு!
ரோஹித் சர்மா இந்தியா அணியின் கேப்டனாக இல்லாவிட்டால், அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவ்ரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று முடிந்தது.
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது.
Trending
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழப்பதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியையும் தவறவிடும்.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் மீதும் அணியின் கேப்டன் மீதும் பல்வேறு விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்து வாருகிறார். இதனால் இந்திய அணியில் அவரது இடம் குறித்த கேள்விகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ரோஹித் சர்மாவின் இடம் குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சுமார் 20,000 ரன்கள் எடுத்த ஒரு வீரர் - ஆனால் இப்போது பேட்டிங் செய்ய போராடி வருவதைப் பார்க்கும்போது, அவரது ஃபார்ம் அவருக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்று தெரிகிறது. இப்போது என்ன நடக்கிறது என்றால், அவர் கேப்டனாக இருக்கிறார், எனவே அவர் பிளேயிங் லெவனில் விளையாடுகிறார். அவர் கேப்டனாக இல்லாவிட்டால், அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் இருக்கலாம்.
மேலும் தற்போதுள்ள இந்திய அணியில் கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களுடன் ஷுப்மன் கில்லும் உள்ளார். இந்நிலையில் யதார்த்ததைப் பற்றி பேசினால், ரோஹித் சர்மா பேட்டிங்கில் தொடர்ந்து போராடி வருகிறார், என்பதால் நிச்சயம் அவர் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருக்க மாட்டார் என்பதை உறுதியாக கூறமுடிகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் அவர் கேப்டன் என்பதால், அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதற்காக அணியில் நீடிக்கிறார். ஆனால் அவரது ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் கூட அவர் ரன்கள் எடுக்கவில்லை. தற்போதுள்ள ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மை பார்க்கும்போது அது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இர்ஃபான் பதானின் கருத்து விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now