
Rohit named India ODI, T20I captain as India announce Test squad for SA tour (Image Source: Google)
இந்திய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் சர்மா துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கேப்டன்சியை உதறிய விராட் கோலி, தற்போது ஒருநாள் அணிக்கான கேப்டன்சியிலிருந்து விலகியுள்ளார்.