
Rohit Sharma admitted that he was surprised by his innings against Australia (Image Source: Google)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மழை காரணமாக ஆட்டம் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது .இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விளையாடினார்.
ஆட்டம் தொடங்கியதுமே ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 15 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பிஞ்சின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தி அசத்தினார்.
இதனை தொடர்ந்து கேமிரான் கிரீன், மேக்ஸ்வெல் , டிம் டேவிட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதி கட்டத்தில் மேத்தீவ் வெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளுக்கு 43 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி எட்டு ஒவ்வொரு முடிவில் 90 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்தது.