
ஜெர்சியை மாற்றிக்கொண்ட ரோஹித் சர்மா - டேவிட் பெக்காம்! (Image Source: Google)
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம். உலகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அரையிறுதி போட்டியை காண முன்னாள் வீரர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
Rohit Sharma and David Beckham exchanged their jerseys! #WorldCup2023 #CWC23 #INDvNZ #RohitSharma pic.twitter.com/HQEYIMIsLN
— CRICKETNMORE (@cricketnmore) November 16, 2023