
Rohit Sharma Available For England White Ball Series After Getting Tested Covid Negative (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த பயணத்தில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இருப்பினும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட காரணத்தால் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அணியை பும்ரா வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ரோஹித்துக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. நோய் தொற்றிலிருந்து மீண்ட நிலையில் அவர் வலைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இப்போது அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.