
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு வாரனர், மார்ஸ், ஸ்மித் லபுசேன் நால்வரும் அதிரடி சதங்கள் அடிக்க, ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ராஜ்கோட் மைதானத்தில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராக தற்போது ஆஸ்திரேலியா அணி பதிவு செய்த 352 ரன்கள் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக கேப்டன் ரோஹித் சர்மா உடன் வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார்.
ஒரு முனையில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி சரவெடி கொளுத்தினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் தரையிலும் காற்றிலும் பவுண்டரி லைனை தாண்டி ஓடிக் கொண்டிருந்தன. அவர் 31 பந்துகள் விளையாடி மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸ்ர்களுடன் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.