ஐபிஎல் 2025: தீவிர பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் - காணொளி!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இத்தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹ்மதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் மட்டுமே நடைபெறும் என்றும், பிளே ஆஃப் சுற்றுக்கான மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து ஐபிஎல் அணிகளும் எஞ்சிய போட்டிகளுக்கான தங்களுடைய தயாரிப்புகளில் இறங்கிவுள்ளன.
அதன் ஒருபகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்கள் பயிற்சிகளை தொடங்கிவுள்ளனர். அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் ரோஹித் சர்மா பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்திருந்தார்.
ஆனால் அதன்பின் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக அரைசதங்கள் அடித்து ரோஹித் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பினார். இதனால் எதிர்வரும் போட்டிகளிலும் அவரது அதிரடி ஆட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் வலைகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் இணைந்து திலக் வர்மா, கர்ண் சர்மா, மிட்செல் சாண்ட்னர், ராபின் மின்ஸ் உள்ளிட்ட வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர்.
Also Read: LIVE Cricket Score
இதனையடுத்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகியும் வருகிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி புதுபிக்கப்பட்ட அட்டவணையின் படி மே 21 அன்று வான்கடேயில் டெல்லி கேபிடல்ஸையும், மே 26 அன்று ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now