
கடந்த 2021 இறுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி தனது பொறுப்பை துறந்த பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டுக்கும் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் அது முதலே ஓய்வு, காயம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சர்வதேச தொடர்களில் இருந்து விலகி இருந்தார் ரோஹித்.
இப்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வகையில் முகாமிட்டிருந்த அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்திய அணி நிர்வாகம் வேறு ஒரு வீரரை டி20 கேப்டன் பொறுப்பில் நியமிக்க முடிவு செய்யும் எண்ணத்தில் இருந்தால் ரோஹித் சர்மாவை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து விடலாம் என நான் கருதுகிறேன். ஏனெனில், இது ரோஹித் சர்மாவுக்கு வேலை பளுவை திறம்பட நிர்வகிக்க உதவும். மேலும், மன அளவிலும் அவரது சோர்வை இது நீக்கும். இதனை அவரது வயதை கருத்தில் கொண்டு நான் சொல்கிறேன்.