Advertisement
Advertisement
Advertisement

நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் - ரோஹித் சர்மா!

பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு ஒரு வாய்ப்பும் இருந்தது. அந்த நேரத்தில் நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் என்று முதல் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெர்வித்துள்ளார்.  

Bharathi Kannan
By Bharathi Kannan July 19, 2023 • 14:15 PM
நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் - ரோஹித் சர்மா!
நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் - ரோஹித் சர்மா! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் முகாமிட்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் டொமினிக்காவில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து தொடரில் முன்னிலை வகிக்கிறது.

நடந்து முடிந்த முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இது நாள் வரையில் இந்திய அணிக்காக அதிக சதங்களும் அதிக ரன்களும் எடுத்த வீரராக ரோஹித் சர்மா இருக்கிறார். இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக பார்ட் ஓவலில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending


அப்போது பேசிய ரோஹித் சர்மா, “நீங்கள் எப்போது ஆட்டம் இழந்தாலும் ஏமாற்றம் அடைவீர்கள். நான் கடைசி டெஸ்டில் நன்றாக பேட்டிங் செய்து கொண்டு இருந்ததால் ஆட்டம் இழந்ததால் ஏமாற்றம் அடைந்தேன். களத்தில் நீண்ட நேரமாக எனது கவனம் சிறப்பாக இருந்தது. பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு ஒரு வாய்ப்பும் இருந்தது. அந்த நேரத்தில் நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன். ஆனால் நான் இப்போது என்ன மாற்றிக்கொள்ள முடியும் என்று யோசித்து வருகிறேன்.

வெளிப்படையாக எங்கள் இரண்டு அணிகளுக்கும் இடையே பெரிய வரலாறு உள்ளது. நான் பிறப்பதற்கு முன்பே வரலாறு ஆரம்பித்து விட்டது. இரண்டு அணிகளும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறார்கள். இந்த டெஸ்ட் போட்டியும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற ஆட்டங்கள் ஒவ்வொரு நாளும் நடக்காது. இந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. 

வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் முன்னேறும் என்று நான் நம்புகிறேன். இது இரண்டு அணிகளுக்குமே மிகவும் உற்சாகமாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் சரிவுக்கு நான் ரசிகனாக சொல்வது, உள்ளுக்குள்ளே என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் என்னால் இதில் எதுவும் சொல்ல முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியதால் என்னால் ஒரு விஷயம் சொல்ல முடியும், இங்கு நிறைய இளம் மற்றும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.

உண்மையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது அவர்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் கிடைத்திருந்தார்கள் என்றால், அவர்கள் மிகவும் அச்சுறுத்தக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள். ஏனென்றால் ஆடுகளத்தில் நல்ல ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இருந்தது” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement