உலகக்கோப்பை 2023: டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று உலகப்புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்து செமி ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இவ்விரு அணிகள் மோதுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் இரு அணிகளிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, டீ காக், க்ளாஸென், டேவிட் மில்லர், பும்ரா என ஏராளமான உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கின்றன. அத்துடன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டது.
Trending
இந்த நிலையில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.இதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா வழக்கம் போல தம்மைப் பற்றி கவலைப்படாமல் தென்னாப்பிரிக்கா பவுலர்களை அடித்து நொறுக்கி அபாரமான துவக்கத்தை கொடுக்க முயற்சித்தார்.
குறிப்பாக லுங்கி இங்கிடி வீசிய 5ஆவது ஓவரில் 4, 6, 0, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்த ரோஹித் சர்மா அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் ரபாடா வேகத்தில் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் வெறும் 4.3 ஓவரில் இந்தியாவை 50 ரன்கள் தாண்ட உதவி அவர் அபாரமான தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும் இந்த 2 சிக்சர்களையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மொத்தம் 58 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
- ரோஹித் சர்மா : 58* (2023)
- ஏபி டீ வில்லியர்ஸ் : 58 (2015)
- கிறிஸ் கெயில் : 56 (2019)
- ஷாஹித் அஃப்ரிடி : 48 (2002)
Win Big, Make Your Cricket Tales Now