Advertisement
Advertisement
Advertisement

அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார்.

Advertisement
அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 25, 2024 • 10:22 AM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 25, 2024 • 10:22 AM

இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்வ்ஸால் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Trending

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி டிம் சௌதீ பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ள்ள ஷுப்மான் கில் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்துள்ளனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களை எடுத்துள்ளது.

இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், ஷுப்மன் கில் 10 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 243 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டானதன் மூலம் மோசமான சாதனை பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி, சர்வதேசட் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் சமன்செய்துள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மூன்று வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 34 முறை டக் அவுட்டாகி 6ஆம் இடத்தில் இருந்தார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் ரோஹித் சர்மா இப்போட்டியில் டக் அவுட்டானதன் மூலாம் 34ஆவது முறையாக டக் அவுட்டாகி, சச்சினின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் ஜாகீர் கான் 43 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இஷாந்த் சர்மா (40 முறை) இரண்டாம் இடத்திலும், விராட் கோலி (38 முறை) மூன்றாம் இடத்திலும், ஹர்பஜன் சிங் (37 முறை) நான்காம் இடத்திலும், அனில் கும்ப்ளே (35 முறை) ஐந்தாம் இடத்திலும் தொடர்கின்றனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement