
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது இந்தூர் நகரில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக குல்பதின் நயிப் 57 ரன்களையும், நஜீபுல்லா 23 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 15.4 ஓவர்களில் 4 விக்கெடுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 68 ரன்களையும், ஷிவம் துபே 63 ரன்களையும் குவித்து அசத்தினர்.