
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியானது செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் மீண்டும் மழை நிற்காததால் அன்றைய நாளில் போட்டி கைவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தனர்.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.