கட்டம் கட்டிய தோனி; மோசமான சாதனையுடன் திரும்பிய ரோஹித்!
சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியிலும் ரோஹித் சர்மா டக் அவுட்டானதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொட்டக்க வீரர்களாக இஷா கிஷன், கேம்ரூன் கிரின் விளையாடினார்கள். வழக்கமாக ரோஹித் களமிறங்குவார். ஆனால் இன்று வித்தியாசமாக 3ஆவது இடத்தில் விளையாடினார்.
Trending
இதில் கேமரூன் க்ரீன் 6 ரன்களிலும், இஷான் கிஷன் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, எம் எஸ் தோனியின் வியூகத்தில் சிக்கி மீண்டும் ஒரு முறை டக் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
MSD comes up to the stumps
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
Rohit Sharma attempts the lap shot
@imjadeja takes the catch
Watch how @ChennaiIPL plotted the dismissal of the #MI skipper #TATAIPL | #MIvCSK pic.twitter.com/fDq1ywGsy7
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 16 முறையாக டக்கவுட் ஆகியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி கேப்டனாக இதுவரை ரோஹித் சர்மா 10 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதன்மூலம் அதிகமுறை டக் அவுட்டான கேப்டன் எனும் சாதனையையும் ரோஹித் தனது பெயரில் எழுதியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now