
சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் ஆக புகழின் உச்சத்திற்கு சென்ற ரோஹித் சர்மா, தற்போது கேப்டன் பொறுப்பில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என வரிசையாக இவர் தலைமையிலான இந்திய அணி தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது.
குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வீரர்களை மற்றும் சில தவறான முடிவுகளை எடுத்தது மற்றும் எந்தவித போராட்டமும் இல்லாமல் எளிதாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி தழுவியது ஆகிய காரணங்களுக்காக அதிக அளவிலான விமர்சனங்களை ரோஹித் சர்மா சந்தித்து வருகிறார்.
உடனடியாக இவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஒருநாள் உலகக்கோப்பை வரவிருப்பதால் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.