போட்டி நேரம் குறித்த அஸ்வினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் கோரிக்கைக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளார்.
இலங்கை அணியுடனான தொடர்களை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துடன் மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் அனைத்துமே ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான திட்டமாக தான் நடத்தப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.
இந்த சூழலில் தான் உலகக்கோப்பை போட்டிகளுக்கான நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. வழக்கமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்றால் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கப்படும். அது இரவு 10 மணி வரை நடைபெறும். ஆனால் இனி வரும் போட்டிகளை 2 மணி நேரம் முன்பாக காலை 11 மணிக்கே தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை வைத்தவர் முன்னணி ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.
Trending
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர்,“உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறப்போகும் மைதானங்களையும், நேரத்தையும் நன்கு யோசித்து பார்த்தேன். இரு அணிகளின் தரம் மற்றும் பலம் காரணமாக வெற்றிகள் கிடைப்பதில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் பனிப்பொழிவு அதனை மறைத்துவிடுகிறது. டாஸ் வெல்லும் அணி பவுலிங் செய்தால் வெற்றி என்றாகிவிடுகிறது. ஏன் நாம் 11 மணிக்கெல்லாம் போட்டியை தொடங்கக்கூடாது” என அஸ்வின் கூறினார்.
இந்நிலையில் இதற்கு ரோஹித் சர்மா ஆதரவு கொடுத்துள்ளார். அதில், “அஸ்வின் கூறியது ஒரு நல்ல ஐடியா தான். இது உலகக்கோப்பை அல்லவா?? ஒரு டாஸின் மூலம் போட்டியே மாறுவதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. அதை முற்றிலும் நீக்க வேண்டும், 11 மணிக்கு தொடங்குவது நல்லது தான். ஆனால் ஒளிபரப்பாளர்கள் தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும்.
ஒரு கிரிக்கெட் போட்டி என்றால் எந்தவொரு அணிக்கும் சாதகம் என்பது ஒன்று இருக்க கூடாது. எனவே பனிப்பொழிவு என்ற ஒரு விஷயத்தை முன்பு வைத்துவிட்டு, திறமை என்பதை பின்னால் வைப்பது சரியாகை இருக்காது” என ரோஹித் சர்மா பேசியுள்ளார். இதே போன்ற குற்றச்சாட்டுக்களை பல நாட்டு வீரர்களும் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now