சரியான திட்டங்கள் வகுத்து, அதை சரியாக செயல்படுத்துவதே முக்கியமானதாக இருக்கும் - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது சவாலானதாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. லீக் போட்டிகள் முடிவில் குரூப் 1 பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும், குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்தநிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் குரூப் 1 பிரிவில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை, குரூப் 2 பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த போட்டியானது ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.
Trending
அதே போல் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் குரூப் 2 பிரிவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, குரூப் 1 பிரிவில் 2ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகள் இடையேயான் இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நிச்சயம் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நிச்சயம் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும். அரையிறுதி போட்டி நடைபெற உள்ள ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவது முக்கியமானதாக இருக்கும், ஆடுகளத்தின் தன்மையை விரைவில் உள்வாங்கி கொள்ள வேண்டும்.
அரையிறுதி போட்டி நடைபெற இருக்கும் அடிலெய்ட் மைதானத்தில் நாங்கள் ஒரு போட்டியில் விளையாடியிருந்தாலும், அரையிறுதி போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக என்பதால் இந்த போட்டியில் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும். இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
அரையிறுதி சுற்று வரை எப்படி வந்துள்ளோம் என்பதை நாங்கள் மறந்துவிடாமல் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். சரியான திட்டங்கள் வகுத்து, அதை சரியாக செயல்படுத்துவதே முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now