
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 208 ரன்களை குவித்த போதும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
ஆசிய கோப்பை தொடரிலும் இதே போன்ற தவறுகளால் தான் இந்தியா இறுதிப்போடிக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது. டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சமயத்தில் இந்திய அணியின் பவுலிங் இவ்வளவு மோசமாக இருப்பது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இதனை சரிசெய்ய அணிக்குள் அவசர மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ரே, வீரர்களின் மனநல மேம்பாட்டாளர் பேடி அப்டன் ஆகியோரின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஹர்திக் பாண்டியா உட்பட அனைத்து பந்துவீச்சாளர்களும் இடம்பெறவுள்ளனர்.