Advertisement

IND vs ENG: ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement
IND vs ENG: ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
IND vs ENG: ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 10, 2025 • 01:49 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 10, 2025 • 01:49 PM

இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Trending

ஒருநாள் போட்டிகளில் 11000 ரன்கள்

அதன்படி இத்தொடரில் ரோஹித் சர்மா 134 ரன்கள் எடுத்தால், சார்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்களை எட்டிய நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் உலகின் பத்தாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை இந்திய அணிக்காக 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், 49.16 என்ற சராசரியில் 10,866 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் மட்டுமே இந்திய அணிக்காக இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கரை முந்தும் வாய்ப்பு

இதுதவிர்த்து ரோஹித் சர்மா இந்த தொடரில் 11ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டும் பட்சத்தில் இந்திய அணிக்காக அதிவேகமாக 11ஆயிரம் ரன்களை இரண்டாவது வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களில் 11000 ஒருநாள் ரன்களை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் நட்சத்திர வீரர் விராட் கோலி 222 இன்னிங்ஸ்களில் 11ஆயிரம் ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார்.

ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு

மேற்கொண்டு ரோஹித் சர்மா இத்தொடரில் 24 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை முந்தி நான்காவது இடத்தைப் பிடிக்கவுள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 344 ஒருநாள் போட்டிகளில் 318 இன்னிங்ஸ்களில் விளையாடி 10889 ரன்கள் எடுத்து அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெயிலுன் சிக்ஸர் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு

Also Read: Funding To Save Test Cricket

இந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா ஒரே ஒரு சிக்ஸர் அடித்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்கவுள்ளார். ரோஹித் சர்மா 257 இன்னிங்ஸ்களில் 331 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில், கிறிஸ் கெயில் 294 இன்னிங்ஸ்களில் 331 சிக்ஸர்களை அடித்துள்ளார். இப்பட்டியளில் பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement