
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து தாயகம் திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அனுபவம் கலந்த இளம் இந்திய அணி விளையாட உள்ளது.
கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய ரோஹித் சர்மா அதன் பின் ஒன்றரை வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். மேலும் அந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்ததால் அவர்களை கழற்றி விட்டு இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணி விளையாடும் என்ற செய்திகள் வெளி வந்தன.
ஆனால் தற்போது பாண்டியா காயத்தை சந்தித்துள்ளதால் மீண்டும் கேப்டனாக தேர்வாகியுள்ள ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 2024 டி20 உலகக் கோப்பையிலும் கேப்டனாக செயல்படுவது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் மீண்டும் கிடைத்த இந்த வாய்ப்பில் ரோஹித் சர்மா கேப்டனாக படைக்க உள்ள சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.