
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டது. சென்னையில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் விளையாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 248 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட்டானது.
இந்திய அணிக்கு அடுத்த சர்வதேச சவாலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரவுள்ளது. ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆனால் இதற்கு தயாராவதில் தான் இந்திய வீரர்களுக்கு சிக்கல் உள்ளது. ஏனென்றால் அடுத்த 2 மாதங்களுக்கு அவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளனர். மே 28ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இது முடிந்த ஒரு வாரத்திற்குள் டெஸ்ட் ஃபார்மெட்டிற்கு மாற வேண்டும்.
ஐபிஎல் தொடரில் வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடுவதால் பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.