கோப்பையுடன் போஸ் கொடுத்த ரோஹித் - கம்மின்ஸ்!
ரோஹித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
நாளை நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு இரு அணி வீரர்களும் பயிற்சி போட்டியை தவிர்த்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நாக்பூர் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது எப்போது என்று தான் தெரியவில்லை. முதல் நாளில் முதல் ஓவரிலிருந்து இருக்குமா? அல்லது 2ஆவது நாளில் இருக்குமா என்பது தான் கேள்விக்குறி. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் இந்திய அணி சுழற்பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்னாள் வீரர்களின் கருத்து.
Trending
மைதானம் வறண்ட நிலையில் இருக்கும் நிலையில், முதல் நாளில் முதல் ஓவரிலேயே பந்து சுழன்று வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இதற்கு இந்திய தலைமை பயிற்சியாளர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மைதானத்தில் கொஞ்சம் புற்களை வளர வைக்க மைதானம் பராமரிப்பாளர்களிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
எனினும், மைதானம் எப்படி என்று இன்று மாலை தான் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாக்பூரைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிகிறது. எனினும், பனிப்பொழுவு காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக போட்டி தொடங்கிய ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.
மைதானம் ஈரப்பதமாக இருந்தால் பந்து ஸ்விங் ஆகாது. இப்படிப்பட்ட சூழலில் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்காது. இதனால், போட்டியில் டாஸ் எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு போட்டியில் முதல் அரைமணிநேரமும் முக்கியம். இந்த நிலையில், இரு அணியின் கேப்டன்களும் பார்டர் கவாஸ்கர் கோப்பையுடன் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now