
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் மீதான விமர்சனங்களும் அதிகரித்து வந்தது.
அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மின் காரணமாக மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார். இதனால் எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் குறித்து ரோஹித் சர்மா மனம்திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஆஸ்திரேலியாவில் உள்ள சூழ்நிலையில் ஸ்காட் போலந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமானது. அவரது பிட்ச் வரைபடத்தை நாங்கள் சரிபார்த்தபோது, அவரது 90% பந்துகளை சரியான இடத்தில் இருந்து வீசுகிறார். அதிலும் குறிப்பாக அதிக அகலமான பந்துகளும் இல்லாம, அதிக ஃபுல்லர் பந்துகளும் இல்லாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் பந்தை வீசி பேட்டர்களுக்கு அழுத்தத்தை வழங்கியுள்ளார்.