Advertisement

ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார் - ரோஹித் சர்மா!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் களம் இறங்குவதற்கு 99 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  

Advertisement
ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார் - ரோஹித் சர்மா!
ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார் - ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 13, 2023 • 07:52 PM

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதற்குமுன், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7 முறை களமிறங்கி, அனைத்திலும் வென்றிருக்கிறது. இதனால், நாறைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 13, 2023 • 07:52 PM

இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டமாக செயல்பட்டு, ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 345 ரன்களையும் சேஸ் செய்து அபார வெற்றியைப் பெற்றிருகிகறது. இதனால், இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாக கருதப்படுகிறது. ஆகையால், நாளை கடைசி ஓவர் வரை கூட ஆட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில், தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்டார். இதுகுறிடதது பேசிய ரோஹித் ஷர்மா, “ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார்” எனக் கூறினார். 100% சதவீதம் உறுதியென அவர் கூறாதது உற்றுநோக்க கூடியதாக இருக்கிறது. 

இந்நிலையில், மாலை நேர பயிற்சியின் போது சக வீரர்களுடன் ஷுப்மன் கில் கலந்துகொண்டார். அப்போது, பேட்டிங் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை, தடவிப் பார்த்து ஷுப்மன் கில் பார்வையிட்டார். இதன்மூலம் நாளைய ஆட்டத்தில் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை ஷுப்மன் கில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement