
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றப் பிறகு, தற்போது இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் அணியில் யாருமே அரை சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 43 ரன்களை அடித்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் 114/10 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், கில் 7 ரன்களை மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 19 , ஹார்திக் பாண்டியா 5 , ஷர்தூல் தாகூர் 1 ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.