Advertisement

பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது - ரோஹித் சர்மா!

பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது என ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றிக்கு பின் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

Advertisement
Rohit Sharma Statement After Mumbai Indians Beat Royal Challengers Bangalore!
Rohit Sharma Statement After Mumbai Indians Beat Royal Challengers Bangalore! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 10, 2023 • 12:47 PM

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 10, 2023 • 12:47 PM

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் டூப்ளிசிஸ் 65 ரன்களும், மேக்ஸ்வெல் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Trending

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 16.3 அவர்களின் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களையும், நேஹல் வதேரா 52 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சிறப்பாக இருந்தது. நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாடினால் நிச்சயம் இந்த மைதானத்தில் ரன்கள் கிடைக்கும். எங்கள் அணியில் பேட்டிங் செய்த அனைவருமே மிகச் சிறப்பாக விளையாடினர். அதேபோன்று எங்கள் அணியில் உள்ள ஆகாஷ் மத்வால் கடந்த ஆண்டிலிருந்து எங்கள் அணியுடன் இருக்கிறார். அவரிடம் தனி ஸ்கில்ஸ் இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம். எனவே அவருக்காக ஒரு ரோலை வழங்கி அவருக்கு நம்பிக்கை கொடுக்க நினைத்தோம். 

உத்தரகாண்ட் அணியின் கேப்டனான அவர் தற்போது முழுவதுமாக தனது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார். இந்த போட்டியில் 200 ரன்களுக்குள் பெங்களூரு அணியை நிறுத்தியது ஒரு நல்ல பவுலிங் என்று நான் கூறுவேன். ஏனெனில் 220 ரன்களுக்கு மேல் சென்று இருந்தால் அது பாதுகாப்பான ஸ்கோராக இருந்திருக்காது. அந்த வகையில் 200-ரன்களுக்குள் எங்களது பந்துவீச்சாளர் எதிரணியை நிறுத்தியது மிகச் சிறப்பான ஒன்று. பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement